November 21, 2024

பட்ஜெட்டுடன் கலைப்படுமா யாழ்.மாநகரசபை?

அடுத்த பட்ஜெட்டுடன் யாழ்.மாநகரசபை கலைந்து விசேட ஆணையாளரின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்படுமென்ற தகவல்கள் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் சபை கலைக்கப்பட்டு 2022வரை அல்லது அடுத்த உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரை மாநகரசபை விசேட ஆணையாளர் நிர்வாகத்தைப் பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்ற அடிப்படையில் கூட்டமைப்பு முன்னணி தரப்புக்கள் பேரம்பேசலில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள.

ஈபிடிபி ஆதரவுடன் வி.மணிவண்ணன் ஆட்சி கதிரையேறியுள்ளதாக விமர்சிக்கப்படடுவரும் நிலையில் அவரை பதவியிறக்க மாவை தரப்பு மற்றும் முன்னணி தரப்புக்கள் இணைந்துள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றது.

ஆனாலும் எம்.ஏ.சுமந்திரன் -டக்ளஸ் கூட்டு மணிவண்ணனை தக்க வைக்க பேரம்பேசுமெனவும் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.

தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டுமென்ற தமிழ் தரப்பு அரசியல் வடமாகாணசபை தொடங்கி யாழ்.மாநகரசபையில் தற்போது வந்தடைந்துள்ளது.