Dezember 3, 2024

ரகசியமாக இலங்கைக்கு வந்துசென்ற சீமான்? தாயார் கூறிய தகவல்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சந்திப்பு தொடர்பில் பின்னணியில் என்ன நடந்தது என்பதை சீமான் அவர்களின் தாயார் நேர்காணலொன்றில் வெளியிட்டிருந்தார்.

லங்கைக்கான சீமானின் பயணம் தொடர்பில் அவர் கூறுகையில்,

என்னிடம் என் மகன் சொன்னார் நான் தலைவரை பார்க்க இலங்கைக்கு போகப்போகிறேன் என, அதற்கு நான் சொன்னேன் அங்கு ஒரே சண்டையாக இருக்கு நீ இப்போதைக்கு போகாதப்பாவென்று, அதற்கு இல்லை நான் போகப்போகிறேன் என சீமான் கூற, அதற்கு நாங்கள் சொன்னோம் அதற்கு முன் மருந்தை குடித்து நாங்கள் சவோமென, அப்போது சீமான் சொன்னார் நீங்கள் வேண்டுமென்றால் சாகுங்கள் அம்மா, எத்தனையோ மக்கள் இருக்கின்றனர் நான் போகவேண்டுமென சொல்லி இலங்கை சென்று 22 நாட்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு வந்ததாக சீமானின் தாயார் கூறியுள்ளார்.

மேலும், சீமான் இலங்கை சென்று வந்தால் பிறகுதான் எங்களுக்கு தெரியும், சென்று வந்து விட்டார் என, அது வரைக்கும் தஞ்சாவூரில் படப்பிடிப்பில் இருப்பதாகவே சீமானின் தம்பி சொல்லி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.