மஞ்சள் வியாபாரம்:187 கோடி கோத்தாவிற்கு மிச்சமாம்?
இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் பிடிபட்டால் எரிக்கிறீர்கள், அதுவே தங்கம் பிடிபட்டால் அரசுடைமையாக்குகிறீர்கள். மஞ்சளையும் அரசுடைமையாக்கி விற்பனை செய்தால் மஞ்சள் விலை குறையும் என்று எதிர்க்கட்சி தலைவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்த கருத்திற்கு கோத்தாவின் அல்லக்கைகள் கோபம் கொண்டுள்ளன.
இலங்கையின் மஞ்சள் தேவை என்பது 7000 டொன் மாத்திரமே இதில் 2000டொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகிறது, சுமார் 5000 டொன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இன்றைய சந்தை மதிப்பின் படி சுமார் 1.8பில்லியன் அதாவது 187கோடி.
உள்ளூரில் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் உள்ளோர் உற்பத்திக்கான சந்தைவாய்ப்பு மறுக்கப்படுவதால் உற்பத்தியாளர்கள் மஞ்சள் உற்பத்திக்கு ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் நாம் 187கோடி ரூபாய்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறது இதனை தடுத்து நிறுத்தும் முகமாகமாகவே மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆண்டுக்கு 187கோடி வெளியில் செல்கிறதை தடுத்து நிறுத்தும் முயற்சியே இது, நீண்டகால இலக்கில் இது ஒரு வெற்றியாகும், அடுத்த விளைச்சலுக்கு மஞ்சள் உற்பத்தி தன்னிறைவை எட்டிவிடும் அதுவரையில் விலை உயர்வு ஒரு பாதகமான விடயமாவதுடன் அது குறுகியகால விடயமாகிறது.
ஆயினும் கைபற்றப்பட்ட மஞ்சளைம மக்கள் தேவைக்கு பயன்படுத்தி இருக்கலாமென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
தற்போது இலங்கையில் மஞ்சள் ஒரு கிலோ பத்தாயிரம் ரூபாவிற்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.