இறந்த நோயாளியின் உடம்பில் புதிய கொரோனா வைரஸ்!
பிரித்தானியாவை உலுக்கி வரும் புதிய கொரோனா வைரஸ் நவம்பர் மாதம் முதலே ஜேர்மனியில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்த நோயாளியின் உடம்பில் புதிய வகை கொரோனா இருப்பதை கண்டறிந்த பிறகு Lower Saxony மாநில சுகாதார அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
புதிய கொரோனா வைரஸ் குறித்து Lower Saxony மாநில சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு நவம்பரில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு புதிய வகை கொரோனா இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இதே உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் தான் இங்கிலாந்தின் தெற்கில் கண்டறியப்பட்டு தீவிரமாக பரவி வருகிறது.
உடல்நலக்குறைவால் இறந்த வயதான நோயாளி உடம்பில் உருமாறிய புதுவகை கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மனைவிக்கும் அதே தொற்று ஏற்பட்டது, ஆனால் அவர் உயிர் பிழைத்துவிட்டார்.
நவம்பர் நடுப்பகுதியில் பிரித்தானியாவிலிருந்து திரும்பிய மகளிடமிருந்து இந்த ஜோடிக்கு புதுவகை கொரோனா வைரஸ் பரவியதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமை லண்டனில் இருந்து வந்த பெண் ஒருவர் மட்டுமே புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்தது.
ஜனவரி 6 ஆம் தேதி வரை பிரித்தானியாவில் இருந்து சாலை, கடல் மற்றும் விமானம் போக்குவரத்திற்கு ஜேர்மனி தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.