கமலின் லஞ்சப் பட்டியல் வெளியானது!
மக்கள் நீதி மய்யம் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு தற்போதிலிருந்தே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது . அதன் தலைவர் கமல் செல்லும் இடங்களில் எல்லாம் ஆளும் அதிமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் . திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல் இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அதிமுக அரசில் தொட்டில் முதல் சுடுகாடு வரை எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என புள்ளிப்பட்டியலுடன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்திராவிட கட்சிகளுக்கு மாற்று என களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் , கடந்த நடாளுமன்ற பொது தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது .இந்த நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளாராக முன்னிலைப்படுத்தி களத்தில் இறங்கியுள்ளார் கமல் .தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல் ,பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டுமெனில் 200 முதல் 500 வரை அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும் ,
குடும்ப அட்டை , ஒட்டுனர் உரிமம் , கடவுச் சீட்டு , சொத்து வரி , மின் இணைப்பு என தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைத்து வகையிலும் அரசு அலுவலகங்களிலும் , அதிகாரிகளும் லஞ்சம் வாங்குகின்றனர் என பட்டியலுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்