சீமானிடம் பணியாத பேரம் ! திமுகவிடம் துண்டுபோட்ட கமல்ஹாசன்!
தமிழகத்தில் 20021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சீமானிடம் கமல்ஹாசன் கேட்டுள்ளாராம் இந்த முறை நாம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என ஒரு சிலர் சீமானுக்கு ஆலோசனை வழங்கினராம் அப்படி கூட்டணிக்கு போனால் மக்கள் நீதி மய்யம்-ஓவைசி அமைக்கலாம். வெறும் சில கட்சிகள் கூட நம்முடன் கூட்டணிக்கு வரும் என்று சொன்னார் அவர்கள்கூறியுள்ளனர்.
ஆனால் சீமானிடம் பேசிவிட்டு இப்போது கமல்ஹாசன் ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போறார் என்றதும் ரஜினியிடம் தொடர்ந்து ஆதரவு கேட்டு வருகிறார் . ஈகோ பார்க்காமல் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என கமல்ஹாசன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் அரசியல் வருகையை ஆதரித்த சீமான், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ஆரம்பம் தொட்டே எதிர்த்து வருகிறார். நடிகராக ரஜினியை கொண்டாடுகிறோம். ஆனால் தமிழ் மண்ணை தமிழன்தான் ஆள வேண்டுமென்ற விளக்கத்தையும் அவர் முன்னிறுத்துகிறார்.
ஒரு பக்கம் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிக்கு கேட்ட கமல்ஹாசன், ரஜினியுடன் இணையத் தயார் என ஏன் சொல்கிறார். அப்படியென்றால் ரஜினியை கடுமையாக எதிர்க்கும் நாம் தமிழர் கட்சியுடன் அவர் எதற்காக கூட்டணி பற்றிப் பேச வேண்டும் என நாம்தமிழர் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்.
அத்துடன் திமுகவை ஒருபக்கம் எதிர்ப்பது போல எதிர்த்துக்கொண்டு மறுபக்கம் அக்கட்சியுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தையை கமல் நடத்துகிறார். காங்கிரஸுக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காக கமல்ஹாசனுக்கு 25 சீட் வரை தர திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதனால்தான் கமல்ஹாசனை எப்போதும் இல்லாத அளவுக்கு விமர்சித்துள்ளார் சீமான் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி வட்டாரங்களில். இந்த கூட்டணி தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நாம்தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக் ச்நேகனிடம் வெளிப்படையாக த் திமுகவுடன் கூட்டணியில்லை என்பதை மறுக்கமுடியுமா என கேள்வி கேட்டபோது சினேகன் பதில் கூறாமல் மழுப்பியுள்ளார்.