எல்லை மூடல்! கென்ற் நெடுஞ்சாலையில் தவிக்கும் 1500 பாரவூர்திகள்!
இங்கிலாந்தில் புதிய வீரிய கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து பிரான்ஸ் தன்னுடைய எல்லையை மூடியுள்ளது. இதன் காரணமாக கென்ட் பகுதியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட பாரவூர்திகள் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.பிரித்தானியாவுக்குச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த பாரவூர்திகளே மீண்டும் நாட்டைவிட்டு வெளியேற முடியாத நிலை நெடுஞ்சாலையில் தரித்து விடப்பட்டுள்ளன.
ஏற்பட்டுள்ளது. விரைவில் உணவுப் பொருள் பற்றாக்குறை வரலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பிரான்ஸ் தன்னுடைய எல்லையை திறக்கும் என்ற நம்பிக்கையில் கென்ட் பகுதியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட பாரவூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் போக்குவரத்து தடை தொடர்பாக பிரான்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி சரி செய்யப்படும் என்று உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டுடனான தனது எல்லையை பிரான்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடியது. 48 மணி நேரத்துக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவித்திருந்தது.
கென்டில் சிக்கியுள்ள பல நூற்றுக்கணக்கான பாரவூர்திகள் மான்ஸ்டன் விமான நிலையத்தில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.