November 22, 2024

கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை:சுற்றுலாவிற்கு வரவேற்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு  திறந்தவுடன்,  ரஸ்யாவைத் தவிர, ஜேர்மன் மற்றும் இந்தியாவும் தங்கள் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளதாக ஒரு அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.

ஆயுத ஊழல்களால் தேடப்பட்ட அந்த அதிகாரி ரஸ்யாவில் பதுங்கியிருந்த நிலையில் தற்போது நாடு திரும்பி கோத்தாவின் சிபார்சில் பதவி பெற்றுள்ளார்.

இதனிடையே வெளிநாடுகளில் சிக்கித் தவித்துள்ள இலங்கைப் பிரஜைகள் மற்றும்  சுற்றுலாப் பயணிகள் இலங்கை  வெளியுறவு அமைச்சகத்தின் முன் அனுமதியின்றி நாடு திரும்புவதற்காக டிசம்பர் 26 ஆம் திகதி விமான நிலையத்தை திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என  சுற்றுலாத்துறை  அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ரஸ்ய சுற்றுலாப் பயணிகள் மட்டுமே முதலில் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.