März 29, 2025

சதொச கிளைகளில் குறைந்த விலையில் முகக்கவசம்!

சதொச கிளை மற்றும் இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி மொத்த விற்பனையாளர்கள் 12 ரூபாய்க்கும் நுகர்வோர் 15 ரூபாய்க்கும் முகக்கவசங்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சதொச நிறுவனத்தின் 15 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு சதொச தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வாரம் தொடக்கம் தொற்று நீக்கிகளையும் குறைந்த விலைக்கு விநியோகிக்கப் போவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

2021ஆம் ஆண்டு தொடக்கம் இளம் தொழில் முயற்சியாளர்கள் ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு, மக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய ஆயிரம் கியூஷொப் விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.