வெள்ளத்திற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்?
யாழ்ப்பாண மாநகர் இம்முறை வெள்ளத்தில் மூழ்க கழிவுநீர் வாய்க்கால்களை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கழிவும் காரணமென தெரியவந்துள்ளது. இன்றையதினம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளால் சுத்தம் செய்யப்பட்டு ,பெருமளவு பிலாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய,கழிவுப்பொருள்களும் அகற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகரின் போதனா வைத்தியசாலை வீதியில் இந்த நடவடிக்கை இன்று நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.
கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதனால் நீர் வழிந்தோடும் செயற்பாடு தடைப்பட்டது.
அதன் காரணமாகவெள்ள நீர் வழிந்தோடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளினால் கழிவுநீர் வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டபோதே குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.