பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் .
பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் .
இத் தகவலின் 100% உண்மைத் தன்மையை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியாது எனக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் பகிரப்படுகிறது. கொரோனா நெருக்கடி காலத்தின்
சிறப்புச் செயற்பாடாக, வதிவிட அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு ஆறு மாத கால தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இது மனிதாபிமான செயல்திட்டமென அரசு அறிவித்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் வதிவிட அனுமதிப் பத்திரம் இல்லாத அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
– கீழ்வரும் தொலைபேசி எண்ணுக்கு
அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழிலேயே உரையாடி உங்கள் RDVஐ பெறமுடியும்.
தொலைபேசி எண்: 0142500900.
– உங்கள் தகவல்களை ‚Plateforme
d’Accueil pour Demandeur d’Asile‘ (PADA) உள்வாங்கி, OFIIயிடம் RDV பெற்று உங்களை (PADA தரும் தற்காலிக பத்திரத்துடன்) அனுப்பி வைப்பார்கள். அங்கு ஆறு மாத அனுமதிப்பத்திரம் உடனே கிடைத்துவிடுகிறது.
– ஆறு மாத தற்காலிக வதிவிட
பத்திரத்தைப் பெறுவதினூடாக நீங்கள் CMUஐயும் அதன் மூலம் இலவச மருத்துவ, போக்குவரத்து வசதிகளை நீங்கள் பெறமுடியும்.
– அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள்
உங்கள் அரசியல் தஞ்ச கோரிக்கை மனுவை மீளவும் சரிபார்த்து அனுப்ப முடியும். மனுவில் உங்கள் அரசியல் தஞ்சம் கேட்பதற்கான தற்காலிக சூழ்நிலையை சுட்டிக்காட்டி மீண்டும் OFPRAக்கு அனுப்ப மறவாதீர்கள்.
பலதடவை விணப்பித்து (Reapply)
வதிவிட பத்திரங்கள் இல்லாமல் இருப்பவர்களும், நீண்ட காலமாக எவ்வித வதிவிட பத்திரங்களும் இல்லாமல் இருப்பவர்களும்
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தகவல் உமாகாந்தன்.