கோத்தாவிற்கு காலநீடிப்பு: கூட்டமைப்பு திட்டம்?
கோத்தா அரசினை ஜெனீவாவில் காப்பாற்றும் புதிய நாடகத்தை கூட்டமைப்பு இம்முறையும் அரங்கேற்ற தொடங்கியுள்ளது.
இலங்கைக்கு மேலும் இரண்டுவருட காலஅவகாசமொன்றை பிரிட்டன் ஊடாக பெற்றுக்கொடுக்க சதிகள் பின்னப்படுவதாக தெரியவருகின்றது.
அண்மையில் இவ்விடயம் தொடர்பிலா கூட்டமொன்று தூதரக மட்டத்தில் இடம்பெற்றதாகவும் வழமை போலவே இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் அதில் பங்கெடுத்ததாகவும் தெரியவருகின்றது.
கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் பற்றி எந்தவொரு தகவலும் கட்சியின் ஏனைய தலைவர்களிற்கு தெரியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமொன்று தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு கோட்டாபய அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இது குறித்து ஆராயும் பொருட்டு இக்கூட்டம் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகள், சமகால அரசியல் நிலவரங்கள், ஜெனீவா தீர்மானங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இலங்கை அரசிற்கான மற்றொரு கால அவகாசத்தை வழங்கும் நகர்விற்காகவே இக்கூட்டம் கூட்டப்படுவதாக தெரியவருகின்றது.