தமிழுக்கே முன்னுரிமை:தலைவர் டக்ளஸ்!
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் பெயர்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் எனவும், மக்களுடைய காணிகளை மக்களுக்கே கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் முன்னணியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இணைத்தலைவரான ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்; பங்கேற்புடன் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு அங்கு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான பெயர்களை சிங்களத்தில் பயன்படுத்தாமல், அதற்குரிய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுபீட்சத்தின் நோக்கு என்ற பொருள் பொதிந்த தமிழ்ப் பெயர் இருக்க சிங்களச் சொற் பிரயோகங்களை தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.