November 25, 2024

நாடாளுமன்றில் பதுங்கியவர்கள்:மக்கள் அதிருப்தி?

வரவு  செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா அதிகாரிகளின்  அறிவுறுத்தலின் பேரில் வாகெடுப்பில் கலந்து கொள்ளாது அவையில் இருந்து வெளியேறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் அம்பலப்படுத்தி இருக்கிறது .

இந்நிலையில் தமிழ் தரப்புக்களது நிலைப்பாடு அவர்களது ஆதரவாளர்களிடையேயும் கட்சி முக்கியஸ்தர்களிடையேயும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தியாவின் பிரதிநிதிகளாக மாறி அவர்களின் நலன்களுக்காக அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றிவருகின்றார்கள்.

தமிழ் மக்களின் நலன்களை தவிர்த்து இந்தியா போன்ற நாடுகளின் நலன்களை முன் நிறுத்தி  செயல்படுவது என்றால் தமிழ் மக்களுக்கு அரசியல்  தேவை இல்லை.யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய துணை தூதுவர் அலுவலகமே  போதுமானது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் வரவு செலவுத்திட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் கூட்டமைப்பிலுள்ள தமிழீழ விடுதலை இயக்கமென்பவை எதிர்த்திருந்தன.

ஆயினும் ஏனைய தரப்புக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.