தியாகி நிதியில் குளம்:திறந்து வைத்தார் சவேந்திரசில்வா!
வட்டுக்கோட்டையில் ஏற்கனவே இருந்த உப்புவயல் குளத்தை திறந்து வைக்க வந்திருந்த சவேந்திரசில்வாவுடன் புகைப்படமெடுக்க முண்டியடித்தது கூட்டமொன்று.
தியாகி அறக்கொடை எனும் புலன்பெயர் வருகையாளர் ஒருவரது நிறுவனத்தினரின் நிதிப் பங்களிப்பில் வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வேலை வெட்டியிருக்கின்ற படையினரை பயன்படுத்தி கடந்த மூன்று மாத காலமாக பயன்படுத்தி புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினையே லெப் ஜெனரல் சவேந்திர சில்வா திறந்து வைத்துள்ளார்.
இராணுவ எடுபிடிகளினை பயன்படுத்தி விவசாய சம்மேளனமெனும் அமைப்பின்; ஏற்பாட்டில் இடம்பெற்ற புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார,யாழ் இந்திய துணை தூதுவர்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,மேலதிக அரச அதிபர் (காணி) சங்கானை பிரதேச செயலர், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், மற்றும் ராணுவ உயரதிகாரிக