November 22, 2024

தடையில்லையென்கிறார் தவிசாளர்?

 

மக்களின் அபிவிருத்திகளை தடுக்கும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் அவ்வாறு நோக்கம் இருந்தால் சபை அனுமதி பெறப்படாமல் பெயர்ப்பலகை நாட்டப்பட்ட விதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பேன்  என வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார் .

யாழ் ஊடக அமையத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வலி கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட குறித்த வீதி உடன் அமைக்கப்படுவது தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் ஆனால் சபையின் அதிகாரங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாமல் பெயர்ப்பலகை நாட்டியதன் காரணமாக சபையின் அனுமதியுடன் குறித்த பெயர் பலகையை பக்குவமாக கழட்டினேன்.
அரசாங்கத்தின் வீதி புனரமைப்பு திட்டங்கள் மக்களுக்கு உரிய வகையில் சென்றடைவதற்கு மக்கள் சபை என்ற நீதியில் அனைத்து பங்களிப்புகளையும் வழங்கி வருகிறோம்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கம்பரலிய திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்படவிருந்த வீதிகள் சில அப்போதைய ஆட்சி குழப்பத்தின் காரணமாக நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த வீதிகளின் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஏனெனில் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பங்கு பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 300 மில்லியன் ரூபா வில் முதற்கட்ட நிதியாக 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.