மீண்டும் தேர்தல் திருவிழா:மாகாணசபை ஏப்ரலில்?
மாகாண சபை தேர்தலை ஏப்ரலில் நடாத்த அலரிமாளிகையில் பஸில் ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்து வருகின்றார். மறுப்புறம் பழைய முறைமையில் தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை ஆளும் கட்சி ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கடந்த மற்றும் இவ்வாரம் முழுவதிலும் பஸில் ராஜபக்ஷ அலரி மாளிகையில் இதற்கென பல்வேறு சந்திப்புகளை முன்னெடுத்துள்ளார்.
இந்த சந்திப்புகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் என பல சந்தர்ப்பங்களில் கலந்துக்கொண்டுள்ளனர்.
பழைய முறைமையில் மகாண சபை தேர்தலை நடத்துவதற்கான திருத்த சட்டமூலத்தை ஜனவரியில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி சமர்பிக்கவுள்ளது.
மாகாண சபை தேர்தலை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளே அரசாங்கத்திடம் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு காணப்படுவதுடன் மே மாதத்தில் வெசக் நிகழ்வுகள் இடம்பெறும். எனவே இந்த இரு நிகழ்வுகளை கருத்தில் கொண்டுள்ள அரசாங்கம் பெரும்பாலும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடாத்துவற்கான வாய்ப்புகளே உள்ளன எனவும் குறிப்பிட்டார்.