April 2, 2025

29வருடங்கள் தாண்டிய சாந்தனின் சிறை?

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தற்போதைய தோற்றத்தை அவரது சகோதரன் பகிர்ந்துள்ளார்.

ஒரு மனிதன் தனது இளமையின் 29 வருடங்களை சிறைக்குள் தொலைப்பது என்பது 10 மரணதண்டனைகளுக்கு சமனாகும். இனியும் இந்த மனிதனைத் தண்டிப்பதால் என்ன கிடைத்து விடப் போகின்றது.

இந்தியா ஒரு சர்வாதிகார நாடல்ல அது உலகத்துக்கே அன்பைப் போதித்த ஒரு ஜனநாயக நாடாகும். இனியாவது அவர்களை மன்னித்து விடுதலை செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக தமிழகத்தில் காத்திருந்த வேளை சாந்தன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.