அனுதாபம் தெரிவித்த பணிப்பாளர்?
அண்மையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாறி எடுத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனி இப்படியான துயரச்சம்பவம் நடைபெறக்கூடாது நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரில் பங்குகொண்ட கிளிநொச்சி வைத்தியசாலைப்பணிப்பாளர் தெரிவித்துள்ளாராம்.
மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் சடலங்கள் உடல்கூற்று பரிசோதனைக்காக பொலீஸார் முன்னிலையில் உறவினர்களினால் அடையாளம் காட்டப்படுவது வழமை. அன்றைய தினம் குறித்த சம்பவமும் அவ்வாறே நடைபெற்றபோது அடையாளம் காட்டப்பட்டதில் ஏற்பட்ட தவறால் இந்த துயரச்சம்பவம் எதிர்பாராது நடைபெற்றுள்ளது. இவ்வாறான துயரச்சம்பவம் நடைபெற்றமையானது வருந்தத்தக்க விடயம் எனவும் தெரிவித்து „வையகத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் தெய்வத்துள் வைக்கப்படுவார் ‚ என்ற தெய்வ வாக்குக்கு இணங்க, மிகக்குறுகிய மானிட வாழ்க்கையில் அவர்தம் அற்புத வாழ்வின் அழகான முற்றுப்புள்ளியாக மரணம் கருதப்படுகிறது. எனவே துயற்றிருக்கும் குடும்பத்தினரை மேலும் துயருறச்செய்த சம்பவமானது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக நாமும் துயரில் பங்குகொள்வதோடு ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்வதாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.