April 2, 2025

டச்சு நாட்டுத் துறவி சடலமாக மீட்பு

ரத்கம பகுதியில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் பௌத்த துறவியின் சடலம் ரத்கமாவிலுள்ள களப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.59 வயதான டச்சு நாட்டைச் சேர்ந்த குறித்த துறவி காணாமல்போயுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரத்கம காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.

இந் நிலையில் காணாமல்போன துறவி உயிரிழந்த நிலையில் ரத்கம பகுதியில் அமைந்துள்ள களப்பொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து காலி நீதிவான் மரணம் குறித்த விசாரணையை நடத்தியதுடன், சடலம் கரபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.