உயிரோடிருக்கும் வரை விடமாட்டேன்:சங்கரி
உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சம்பந்தனும் சேனாதிராஜாயும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம்.
ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள் எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசு கட்சியுடன் எந்த காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்க மாட்டேன்.
ஆனால் இணைப்பதற்கு சிலர் தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை அந்த முயற்சியை கை கூடாது சம்பந்தனும் சேனாதிராஜாவும் தங்களுடைய பதவிகளை துறக்க வேண்டும்.
ஏனெனில் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள் தான்
அரவிந்தன் என்னும் எனது கட்சி உறுப்பினர் ஒருவர் தற்பொழுது பின்னால் இருந்து நகர்த்தி விடுகிறார்கள் அதாவது தன்னை கட்சியின் துணைத் தலைவர் என கூறி செயற்படும் அரவிந்தன் என்பவர் கடந்த 16 வருடங்களாக லண்டனில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து விட்டு தற்போது இங்கே வந்து தன்னை ஒரு மக்கள் மீது அக்கறையுள்ள பிரமுகர் என நிரூபிப்பதற்கு செயற்படுகின்றார்.
நான் உயிரோடு இருக்கும்வரை எந்த காரியமும் இடம்பெறாது அத்தோடு எமது கட்சியில் அவருக்கு துணைத் தலைவர் என்ற பதவி எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை.
எனவும் தன்னைப் பற்றி ஏராளமான பொய்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றார் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் தெரிவித்தார்.