März 28, 2025

யாழில் வங்கிகள் முன் மண் அணைகள்?

யாழ்ப்பாணத்தை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வங்கிகள் மண் அணைகளை அமைக்க தொடங்கியுள்ளன.

வினைத்திறனற்ற யாழ்.மாநகரசபை நிர்வாகம் வெள்ளவாய்க்கால்களை பராமரிக்க தவற நகரமெங்கும் வெள்ளம் சூழந்துள்ளது.

இந்நிலையில் வங்கிகள் தமது அலுவலகங்களை பாதுகாக்க மண் அணை அமைத்துள்ளன.

வன்னியில் பல இடங்களிலும் குளக்கட்டுக்களது அணைகளது உடைப்பியைடுத்து மண் அணைகள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.