März 28, 2025

பசிலுக்கு நாடாளுமன்றம் வர ஆர்வமில்லையாம்?

ராஜபக்ச பரம்பரையினில் மீண்டும் பசில் ராஜபக்வை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர பகீரத பிரயத்தனம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

எனினும் நாடாளுமன்றத்திற்கு வருகை தர அவர் மறுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் நேரில் சென்று அழைப்பு விடுத்த போதிலும் அவர் இதனை ஏற்க மறுத்துள்ளார் என்றார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

முன்னைய ஆட்சி காலத்தில் மிஸ்டர் பத்து சதவீதம் என ஊழல்கள் தொடர்பில் அழைக்கப்பட்ட பசில் ரணில் தரப்பின் கைதிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு தப்பித்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.