கொவிட்-19 தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது: சுவிஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர்!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எலைன் பெர்சட் தெரிவித்துள்ளார்.
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
‘சுவிஸ்லாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மோசமான நிலையை அடைந்துள்ளது. நாம் கரோனாவின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது. எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்’ என கூறினார்.
சுவிஸ்லாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 340,115பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5,181பேர் உயிரிழந்துள்ளனர்.