ஆமிக்கு அறிவுவளர பிரார்த்திக்கும் மனோ?
வடக்கு கிழக்கிலுள்ள படை அதிகாரிகளிற்கு மூளையினை கொடுக்குமாறு பிரார்த்தித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.அத்துடன் இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு செயற்படும்படி வடக்கு- கிழக்கு மாகாண காவல்துறைக்கும் யாழ், வன்னி பிராந்திய ராணுவ கட்டளை தளபதிகளுக்கும் கூறுங்கள் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளையும் நவம்பர் 29 பௌர்ணமியன்று நடந்த கார்த்திகை தீப“ இந்து பண்டிகையையும் காவல்துறையும் இராணுவமும் போட்டு குழப்பியடித்துள்ளன.“
„இராணுவத்தினரும். காவல்துறையும், கார்த்திகை தீப விளக்கேற்றல்களை தடை செய்துள்ளார்கள். இத்தகைய நடைமுறைகள் மூலம் இந்நாட்டில் பௌத்தர்கள்இ, இந்துகள் மத்தியில் ஒருபோதும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.“
நாடாளுமன்றத்தில் கார்த்திகை தீப நிகழ்வுகளை பாதுகாப்பு பிரிவினர் குழப்பும் சம்பவங்கள் நடைபெறவில்லை என சொல்ல வேண்டாம். இவை நடந்துள்ளன. இதற்கு எதிராக காவல்துறை புகார்கூட செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி இங்கு வன்னி எம்பி சார்ல்ஸ் நிர்மலநாதன் சொல்வது முற்றிலும் உண்மை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.