November 21, 2024

புரேவி புயல் முல்லைத்தீவையும் விட்டு வைக்கவில்லை!

புரேவி புயலால் முல்லைத்தீவில் இன்று அதிகாலை மணியளவில் அதிக கூடிய மழைவீழ்ச்சியாக அம்பலப்பெருமாள் குள நீரேந்துப் பிரதேசத்தில் 392 மில்லிமீற்றர்  பதிவாகியுள்ளது. ஐயங்கன்குளத்தில் 344 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.

அதேவேளை வவுனிக்குளத்தில் 282 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பனங்காமம் குளத்தில் 245 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உடையார் கட்டுக்குளத்தில் 220 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளன.

முல்லைத்தீவு – அலம்பில் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை காலை 8.30 மணி முதல் நேற்றிரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் 203.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உடையார்கட்டு பகுதியில் 158 மில்லிமீற்றரும் மணலாறுப் பகுதியில் 112 மில்லிமீற்றருமும் மழைவீழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 6 அடியாக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் கொக்குத்தெடுவாய் மகாவித்தியாலயம், கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிக தங்கியுள்ளனர்.