Dezember 3, 2024

பாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்!

இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது பாஃப்டா அமைப்பு. இதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அதன் தூதராக நியமித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஹ்மான், “திரைப்படம், தொலைக்காட்சி, விளையாட்டு போன்றவற்றில் உள்ள அபாரமான திறமைகளைக் கண்டறிவதற்காக பாஃப்டாவுடன் இணைந்து பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதன்மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாஃப்டா அமைப்பின் ஆதரவுஇ வளரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும். பாப்டாவின் திட்டத்தில் தேர்வாகும் இந்தியத் திறமையாளர்களுக்கு இதர கலைஞர்களுடன் தொடர்பு கிடைப்பதோடு, பாஃப்டா விருது வென்ற கலைஞர்களின் ஊக்கமும் கிடைக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த திறமைகள் உலகளவில் அறியப்படுவதைக் காண ஆவலாக உள்ளேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.