November 21, 2024

எகிப்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

எகிப்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, எகிப்தில் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 718பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 60ஆவது நாடாக விளங்கும் எகிப்தில், இதுவரை ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 911பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக ஆறாயிரத்து 650பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 370பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஆறாயிரத்து 543பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 46பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 718பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.