Dezember 3, 2024

இரண்டுநாட்களில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி!

உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை வடிவமைப்பதற்கு, வெறும் 2 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது.அதாவது, mRNA என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம், இது சாத்தியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இது எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழும்பியுள்ளது.

வெறும் 48 மணிநேரத்திற்குள், ஒரு தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்புவாய்ந்த விஞ்ஞான அம்சம் என்று இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பாராட்டியுள்ளது.

மாடெர்னாவின் தடுப்பு மருந்து என்பது, மெஸன்ஜர் ஆர்என்ஏ(mRNA) அடிப்படையிலானது. அதாவது, ரிபோநியூக்ளெக் ஆசிட் என்பதன் ஒரு பாகம். டிஎன்ஏ -விலிருந்து ஒரு குறிப்பிட்ட புரோட்டீனின் அமினோ ஆசிட் வரிசைப் பற்றிய தகவலை, ரிபோசம்மிற்கு, இது எடுத்துச் செல்கிறது. அந்த டிஎன்ஏ -வில்தான் அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.