November 24, 2024

அங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை?

அங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உடுப்பிட்டி வதிரி  சக்களாவத்தை வீதி ஆயிரத்து 300 மீட்டர் காப்பட் வீதியாகபோடுவதற்காக சுதந்திரக் கட்சியின் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர் இனியவன் என்பவர் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன்  ராமநாதன்  கலந்து கொள்வதற்கு வருகை தருவதாக அறிவித்த போதும் உரிய நேரத்தில் வந்தடைந்திருக்கவில்லை.

இந்நிலையில் அவருடைய வருகையை எதிர்பார்த்து வருகைதந்திருந்த வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கூட்டமைப்பு சார்பு தவிசாளர் மற்றும்  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச உறுப்பினர்களுக்கும் காத்திருந்தனர்.அப்போது உடுப்பிட்டி சுதந்திரக் கட்சி அமைப்பாளர்   இனியவனுக்கும் இடையில்வாக்குவாதம் ஏற்பட்டது. இரு பகுதியினரும் வாக்குவாதம் முனைப்படைந்திருந்த நிலையில்  அங்கயன் ஆதரவாளர்களும் தவிசாளர் உடன் முரண்பட்டார்கள். தவிசாளரயும் பிரதேச சபை உறுப்பினர்களையும் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அங்கயன் தரப்பு கோசமிட  தொடர்ந்து  தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினர்களும்; வெளியேறினார்கள்.

அதன் பின் அங்கஜன்  வருகை தந்து சக்களாவத்தை வீதியை அடிக்கல் நாட்டி திரைநீக்கம் செய்து வைத்தனர்.

கூட்டமைப்பு வசமுள்ள கரவெட்டி பிரதேசசபையினை கைப்பற்ற அங்கயன் தந்தை மும்முரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.