முஸ்லீம்,கத்தோலிக்க மக்களிற்கு குரல்கொடுப்போம:முரளி;
மாவீரர் தியாகங்களை போற்றுகின்ற அதேவேளை தமிழ் சமூகம் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்களது உரிமைகளிற்கும் குரல் கொடுக்கவேண்டுமென ழைப்பு விடுத்துள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்.
இனவெறிக்கு எதிராக போராடி உயிரைத் தியாகம் செய்த தமிழ் தியாகிகளையும், அரசு பயங்கரவாதத்தால் உயிர் இழந்த எனது தந்தை உட்பட அனைத்து அப்பாவி தமிழ் பொதுமக்களையும் நினைவுகூரும் இந்த நாளில், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான பாகுபாட்டை நிறுத்துமாறு
இந்த நாட்டின் சக குடிமக்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன். கோவிட் 19 முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ நோயாளிகளின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக கட்டாயமாக தகனம் செய்வது குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் தனது கவலைகளை எழுப்பியுள்ளது. கட்டாய தகனத்தை நியாயப்படுத்த இனவாதிகள் பயன்படுத்திய ஒரே சாக்கு, புதைக்கப்பட்ட உடல்கள் தொற்றுநோய்க்கான ஆதாரமாக மாறி நிலத்தடி நீரின் வழியாக்பரவக்கூடும் என்ற போலி கதை. கோவிட் 19 நோய்த்தொற்று நீர மூலம் பரவக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நோய் கட்டுப்பாட்டு மையம் (சி.டி.சி) தெளிவாகக் கூறியுள்ளது.
பாதுகாப்பான அடக்கம் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கட்டாய தகனக் கொள்கையை மாற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கையிடம் கோரியுள்ளது. எனவே முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரான பாகுபாட்டை நிறுத்தி, இறந்த உடல்களை அடக்கம் செய்வது குறித்த அவர்களின் நம்பிக்கைகளை மதிக்குமாறு சக குடிமக்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என முரளி வல்லிபுரநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.