நியூசிலாந்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்
இன்று 27/11/2020 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள ஒக்லாண்ட் இல் 13, May Road, Mount Roskill (War Memorial Hall) இல் மாலை 6.30 மணியளவில் பெருந்திரளான மக்கள்
முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.இன் நிகழ்வுக்கு பல்வேறுபட்ட நியூசிலாந்து தமிழ் அமைப்புகள், மனிதநேய தொண்டார்வ நிறுவனங்களுடன் மாற்று இனத்தவரும் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
முதல்கட்டமாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் தமிழர் இளையோர் அமைப்ப்பினர்களின் அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
பொதுச்சுடரானது மாவீரர் 2ம் லெப்டினன்ட் விவேகா அவர்களின் சகோதரன் நிமல் ராஜ் அவர்களால் ஏற்றப்பட்டது.
நியூசிலாந்து தேசிய கொடியினை நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் அவர்களால் ஏற்றப்பட்டது.
தமிழீழ தேசிய கொடியினை லெப்டினன்ட் கேணல் இலக்கியா அவர்களின் தாயார் ரூபேனா ஜோன் மேரி அவர்களால் ஏற்றப்பட்டது.
தமிழீழகொடி ஏற்றும் போது தமிழீழ தேசிய கீதமானது இசைக்கப்பட்டு பெரும் உணர்வெழுச்சியுடன் மக்களால் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் மரபின் படி மணியோசை இசைக்கப்பட்டது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து ஈகைச்சுடரனது மாவீரர் வீரவேங்கை யாழ் மைந்தன் அவர்களின் சகோதரி சோபிகா ஏற்றிவைத்தார்.
பின்னர் மாவீரர் உணர்வுகளை தாங்கிய பாடல் ஒலிக்கும் போது, மக்களால் எம் தமிழீழ மண்ணின் விதை வேர்களா கிய மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நியூஸிலாந்திலே இருக்கக்கூடிய பெற்றோர் மற்றும் சகோதரர்களின் குடும்பத்தை சார்ந்த மாவீரர்களுக்கு, விதையுடல் தாங்கிய மாவீரர் தூபி அமைக்கப்பட்டு, உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.
தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவம் தாங்கிய புகைப்படத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட அரங்கத்தினுள்ளே நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.
பின்னர் தமிழீழ எழுச்சி பாடல்களுக்கு அபிகா, விஷனா அவர்களின் நடனம் இடம்பெற்றது.