Mai 12, 2025

கோத்தாவிற்கோர் கடிதம்?

யுத்தத்தில் உயிரிழந்த எமது சகோதரர்களையும் மற்றும் சகோதரிகளையும் நினைவு கூர அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு திருமதி சசிகலா இரவிராஜ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ,எமது அரசியல் தலைவர்கள் வன்முறையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டத் தவறியதால் விரக்கதியுற்ற எமது இளைஞர்கள் அதனை அடைய ஆயுத வழியை கையில் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

எனினும் அவர்கள் அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராக தமது ஆயுதத்தை திருப்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.