திறக்கப்பட்ட அடுத்த நாளே மூடப்பட்ட பாடசாலைகள்?
கிளிநொச்சியில் சமூகத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.அத்துடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கொரோனா அலையின் போது பாதிக்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சியே இருந்திருந்தது.
இதனிடையே கொரோனா அச்சத்தின் பின்பு நேற்று மீண்டும் ஆரம்பித்த பாடசாலையில் வடக்கு மாகாணப் பாடசாசாலைகளில் மாணவர்கள் 43 வீதமும் ஆசிரியர்கள் 84 வீதமும் மட்டுமே வரவு காணப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டத்தின் 12 கல்வி வலயங்களிலும் உள்ள மாகாணப் பாடசாலைகளில் தரம் 6 முதல் உயர்தரம் வரையில் மொத்தமாக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 855 மாணவர்கள் கல்வி கற்கும்போதும் நேற்றைய தினம் 61 ஆயிரத்து 601 மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு வருகை தந்தனர்.
இதேபோன்று குறித்த பாடசாலைகளில் 16 ஆயிரத்து 64 ஆசிரியர்கள் பணியில் உள்ள நிலையில் நேற்றைய தினம் 13 ஆயிரத்து 434 பேர் கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.