November 21, 2024

ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப் – அமெரிக்க நிலவரம்

நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜோ பைடன் முன்னிலை பெற்று வெற்றியை ஈட்ட்டினார். ஓரிரு நாள் இழுபறியாக இருந்தாலும் அதிபருக்கான மெஜாரிட்டியான 270 வாக்குகளை விட அதிகளவில் ஜோ பைடன் பெற்றார். ட்ரம்ப் செய்த சில மேல்முறையீடுகள் தகர்க்கப்பட்டு 306 வாக்குகளைப் பெற்று அதிபராக எந்தத் தடையும் இல்லாமல் பயணிக்கிறார் ஜோ பைடன்.

ஆனால், ட்ரம்ப் இன்னும் பிடிவாதமாக இருந்ததை நாம் பார்த்தோம். ட்ரம்ப் முக்கியமாக நம்பியது ஜியார்ஜியா மற்றும்  பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிகள் குறித்துதான். அவை குறித்து நீதிமன்றமே ட்ரம்ப்க்கு குட்டி வைத்துவிட்டது. ’தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கள்’ என்று ட்ரம்பின் மனைவில் மெலனியா ட்ரம்பும் அறிவுரை கூறியிருந்தார். இனியும் வீம்பு பிடிப்பது நல்லதல்ல என்று முடிவுக்கு வந்திருக்கிறார்.

ட்ரம்பிடம் இருக்கும் அதிகாரங்களை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், ட்ரம்ப் ஒப்புதல் அளிக்காததால் அவை மேற்கொண்டு நகரவில்லை. தற்போது ட்ரம்ப் அந்தப் பணிகளுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இதன்மூலம். அந்தப் பணிகள் தீவிரமாக நடைபெறும் என்பதோடு, ட்ரம்ப் அதிபர் பதவிக்கு மல்லுக்கட்டுவதிலிருந்து விலகி விட்டார் என்பது புரிகிறது.