ஓணானை வேட்டிக்குள் விட்ட கதை?
மாவீரர் நினைவேந்தலுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வல்வெட்டித்துறை,நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து என்.சிறீகாந்தா தலைமையில் தமிழ் சட்டத்தரணிகளின் கடும் வாதத்தை அடுத்து பொலிசார் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.
மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்க்கு தடை கோரி பருத்தித்துறை, நெல்லியடி,வல்வெ்ட்டிதுறை போலீசாரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏம் கே சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் கோ.கருணானந்தராசா, மாவீரர் பண்டிதர் அவர்களின் தாயார் சி.மகேஸ்வரி மற்றும் ஊடகவியலாளர் சி.த.காண்டீபன், பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சுரேஷ், உட்பட எட்டுப்பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனிடையே மன்னார் சிவகரனின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் பொலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்;கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகினார். ஆனாலும் மாவீரர் நினைவேந்தலுக்கான பொலிசின் தடையை நீடிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இதே பாணியில் யாழ் நீதிமன்றில் பொலீசின் தடையை நீடிக்கும் வழக்கிலும் எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகிய போது மாவீரர் நினைவேந்தலை மக்கள் கூடி செய்யமுடியாது என்றும் வேண்டுமானால் வீடுகளுக்குள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
1995ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்டது முதல் மக்கள் தத்தமது வீடுகளிலேயே விளக்கேற்றி அஞ்சலித்து வந்திருந்த நிலையில் தாமாக நீதிமன்ற படியேறி தடை உத்தரவு பெற்றமை மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.