November 22, 2024

மின்சாரம் துண்டிப்பு முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

கஜா புயலை போல நிவர் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும். இந்த புயலானது நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 89 முதல் 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழக அரசு புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “நிவர் புயலினால் போரினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிக காற்று வீசும் என்பதால் மின் கம்பங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான மின் கம்பங்கள் கையிருப்பு உள்ளன. புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும்.

ஏற்கனவே கஜா புயல்லை எதிர்கொண்டு வெற்றி பெற்று விட்டோம். இந்த முறை அந்த அளவுக்கு பாதிப்பு இருக்காத. கடந்த முறை போலவே இந்த முறையும் சிறப்பாக தமிழக அரசு செயல்படும் . கடலூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் அதற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.