அகில இலங்கை ரீதியாக முதல் இடம் பிடித்த மாணவி..!!
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.ஏ.அதீபத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப்பெற்று புத்தளம் நகருக்கும் பாடசாலைக்கும் பெருமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
சமூகத்தில் பற்றாக்குறையாக காணப்பட்டு கொண்டிருக்கின்றன பெண் மகப்பேற்று வைத்திய நிபுணராக உருவாக வேண்டும் என்பதே தனது பிரதான எதிர்கால இலக்கு என்றும் முதலிடம் பெற்றுள்ள மாணவி தெரிவித்துள்ளார்.
இவர் புத்தளம் நகரை சேர்ந்த முஹம்மது அர்ஷாத், ஆசிரியை ஏ.எல்.எப். மஹ்தியா ஆகியோரின் புதல்வியாவார்.
புத்தளம் நகர வரலாற்றில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
தான் சித்தி அடைவேன் என என்னியிருந்ததாகவும் ஆனால் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினை அடைவேன் என எண்ணியிருக்கவில்லை என்றும் இதிலே தன் மிக சந்தோசம் அடைவதாகவும் மாணவி தெரிவித்தார்.