November 22, 2024

புலிக்காய்ச்சல் மாறவில்லை: தடைபோடும் கோத்தா?

புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடத்தினால் தனிமைப்படுத்தல் சடத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணு தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதற்கு வடக்கில் முன்னெடுக்கப்பட்டும் நடவடிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடப்பட்டுள்ளார். மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொது வழியில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மரணித்த சாதாரண மக்களை நினைவுகூருவதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டிலிருந்து செய்யலாம். ஆனால் பயங்கரவாத அமைப்பில் இணைந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்தி விட்டு உயிரிழந்தவர்களை பொதுவெளியில் குழுக்களாக இணைந்து நினைவுகூர்வது ஏற்புடையதாக இருக்காது.

உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது. எனவே புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் வகையிலும் அவ்வமைப்புக்கு பரப்புரை செய்யும் நோக்கிலும் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமனால், சுகாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.