November 22, 2024

டெலோ-சிறீடெலோ பின்னணி மோதல்?

நாடாளுமன்ற உறுப்பினர் விநோகதரலிங்கம் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி கைது செய்ய காவல்துறை முனைப்பு காட்டிவருகின்றது.

டெலோ-சிறீடெலோ பின்னணியில் இம்மேர்தல் நடந்ததாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று (14 ) மாலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.

அதனையடுத்து வாகனத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இதனை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினையடுத்து அவ் இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவு என்பதனால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சிசிரிவி காணொளி உதவியுடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.