கொரோனா பிடிக்கும் இலங்கை புலனாய்வு?
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களைத் தேடிக் கண்டுபிடிக்க விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரைப் பயன்படுத்தி இந்தச் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி நபரொருவர் தனிமைப்படுத்தல் காலப்பகுதியினுள் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியிருந்தால் அவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தொற்றுப் பரவல் அவதான நிலைமையால் கடந்த 11 ஆம் திகதி முதல் நாளை 15 ஆம் திகதி நள்ளிரவு வரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.