பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் சென்ற படகு விபத்து 74 பேர் உயிரிழப்பு!
பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் சென்ற படகு பயணத்தின் போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் படகு கவிழந்து 74 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தண்ணீரில் தத்தளித்வர்களில் 47 பேர் கரை சேர்க்கப்பட்டுள்ளனர். லிபியா நாட்டில் கும்ஸ் கடற்கரை பகுதியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலியல் வன்கொடுமைகள், சிறைபிடித்தல், மோசடிகள் என்று நாட்டில் மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பத்தை அனுபவித்து வருவதால் அதிலிருந்து விடுதலை பெற்றுவிட மாட்டோமா என்று நினைத்துதான் அந்நாட்டில் இருந்து தப்பித்து, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
படகுகள் மூலமாகத்தான் அவர்கள் தப்பித்துச்செல்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இன்றுவரைக்கும் 780 பேர் இத்தால் நாட்டிற்கு அகதிகளாக சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். கொடுமையிலும் கொடுமையாக 1,900 பேர் பாதி வழியில் மறிக்கப்பட்டு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
இப்படியான படகு பயணங்களில் 900 பேருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அப்படித்தான் பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் படகில் ஐரோப்பிய நாட்டுக்கு அதிகதிகளாக சென்றனர். துரதிர்ஷ்டவசமாக கும்ஸ் கடற்கரை பகுதியில் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 74 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சம்பவம் அறிந்த கடலோர காவல்படையினர் மீனவர்களின் உதவியுடன் இதுவரை 31 பேரில் உடல்களை மீட்டுள்ளனர். தண்ணீரில் தத்தளித்தவர்களில் இதுவரை 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த படகு விபத்து உலகம் முழுவதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.