November 21, 2024

மாவீரர்நாள் மெல்பேர்ண் அறிவித்தல்

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி

வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2020ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்றது.

கடந்த காலங்களைப் போலன்றி இவ்வாண்டு நோய்த்தொற்றையும் அதற்காக நடைமுறை-யிலுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தமக்குரிய முறையில் மாவீரர்நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் விக்ரோறிய மாநிலத்தின் நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மெல்பேர்ண் மாவீரர்நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை திறந்த மைதானத்தில் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 27ம் நாள் மதியம் 1.30 மணியிலிருந்து மாவீரர் திருவுருவப்படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துவதற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரைமணிநேர இடைவெளிக்கும் அதிகபட்சம் 50 பேர்வரை சமூக இடைவெளியுட்பட, ஏனைய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்திச் செல்லலாம்.

மதியம் 1.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் மைதானத்துக்கு வருகை தந்து மலர்வணக்கம் செலுத்தலாம். நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு, அரைமணிநேர இடைவெளிக்கு அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு-வார்கள். ஒரேநேரத்தில் அதிகமானவர்கள் வருகைதந்து சுகாதார நடைமுறைகளை மீறாமலிருப்பதை உறுதிசெய்யும் முகமாக முற்கூட்டியே தங்கள் வருகையையும், நேரத்தையும் பதிவு செய்யும்வண்ணம் அன்புடன் வேண்டப்படுகிறீர்கள். பதிவு செய்து நிகழ்விடத்திற்கு வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

மதியம் 1.30 தொடக்கம் 2 வரை, பின்பு 2 தொடக்கம் 2.30 வரை என்று ஒவ்வொரு அரைமணி நேர இடைவெளிக்கும் முன்பதிவை எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் வரவை kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0433002619 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ (SMS) அனுப்பி வைக்கவும்.

பெயர் –

தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி –

வதிவிட முகவரி-

வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை –

வரப்போகும் அரைமணிநேர இடைவெளி – (Eg: 2-2.30 pm)

என்ற விபரங்களை அரசாங்க விதிதுறைகளிற்கமைய அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதிவு (வருகின்ற நபர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு) போதுமானது. 50 பேர்வரை ஒரு நேர இடைவெளிக்குள் பதிவு செய்யப்பட்டால் அதன்பின்னர் பதிவுக்கு வருவோர் வேறு நேரத்தைத் தெரிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.

முன்பதிவு  தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரையோ அல்லது தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல், தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்.

நிகழ்வு நடைபெறும் இடம் :– பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வண்ணம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா