November 22, 2024

இலங்கையில் மரணங்கள் தொடரும் ?

இலங்கையில் கொரோனா தொற்று மரணம் தொடருமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளாகும் 10 ஆயிரம் பேரில் 28 பேர்

உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் பெரும்பாலான உயிரிழப்புகள் முதுமை மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டதன் காரணமாகவே ஏற்படுவதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்ததில் இருந்து 40 நாட்களுக்குள் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் இடம்பெற்ற கொரோனா உயிரிழப்புகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் நேற்று முன்தினம் தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.