தென்னிலங்கை பாணி அரசியல் யாழிலும்?
வட இலங்கையினையும் அரச சார்பு தரப்புக்கள் தென்னிலங்கை பாணி அரசியலிற்கு கொண்டு சென்றுள்ளனர்.வரவேற்பு பேனர்கள் மற்றும் மாலை தாரை,தப்பட்டைகள் என் யாழில் அரச அமைச்சர்களது வருகை பரிணாமம் பெற்று வருகின்றது.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் இளைஞர்கள் அபிவிருத்தி அடைந்து கொள்வதற்காக யாழ் மாவட்டத்திற்கான தேசிய இளைஞர் சேவை மன்ற அலுவலகம் இன்று (08) மாலை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்சவினால் நேற்று; வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, தேசிய இளைஞர் சேவை மன்ற தலைவர் மற்றும் பணிப்பாளர்கள், யாழ் அரச அதிபர் கணபதிபிள்ளை மகேசன், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் அமைச்சின் பிரதிநிதிகள் தலைவர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கட்டட நுழைவாயிலில் நாமலுக்கு இணையான அங்கயனின் படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.