November 21, 2024

சுமந்துவந்த உலங்குவானூர்தி! இரண்டுமுறை விழுந்த இதயம்!

அமெரிக்காவில் நோயாளி ஒருவருக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக  பொருத்தப்பட கொண்டுவரப்பட்டஇதயம், இரண்டு முறை கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
முதல் முறை இதயத்தை சுமந்து வந்த உலங்குவானூர்தி, அடுத்த முறை இதயத்தை கையில் கொண்டு வந்த மருத்துவ ஊழியர் தடுக்கி கீழே விழ, இரண்டாவது முறையாக இதயம் கீழே விழுந்தது.

சாண்டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சல்சிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு இதயம் ஒன்றை கொண்டு சென்ற உலங்குவானூர்தி, மருத்துவமனையின் ஹெலிபேடை நோக்கி இறங்கியது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விழத்தொடங்க, கீழே அதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள், அலறியபடித்து ஓட ஆரம்பித்தனர்.

உலங்குவானூர்தி ஹெலிபேட் மீதே சரிந்து விழ, அதன் இறக்கைகள் எல்லாம் நொறுங்கி வீசியெறியப்பட்டன. உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் , ஹெலிகாப்டருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. வானூர்தி ஓட்டுனர் மட்டும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, மற்றவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

உடனடியாக, கருவிகள் உதவியுடன் உலங்குவானூர்தியை வெட்டி, இதயத்தை பத்திரமாக வெளியே ஏடுத்தனர் மீட்புக் குழுவினர். அதை அவர்கள் மருத்துவ ஊழியர் ஒருவரிடம் ஒப்படைக்க, வேகமாக அந்த இதயத்தை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்ல முயன்ற அந்த ஊழியர், பதற்றத்தில் தடுக்கி கீழே விழுந்தார், அந்த இதயமும் கீழே விழுந்தது. இருந்தும் அது வலிமையான இதயமாக இருந்ததாகவும் அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும்  அது நல்லபடியாக உரிய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாகவும் என்று மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.