November 21, 2024

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியினூடாக மக்களை 90% பாதுகாக்க முடியும்!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் ஊடாக, மக்களை 90 வீதம் பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜேர்மனியின் BioNTech ஆகிய நிறுவனங்களே குறித்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

– Advertisement –

இதன்படி, குறித்த தடுப்பூசியின் ஊடாக, மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை 90 வீதம் தடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த நிலையில், குறித்த தடுப்பூசி ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 மக்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தடுப்பூசியினை இந்த மாத இறுதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த தடுப்பூசியின் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெற சிறந்த வழி கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜேர்மனியின் BioNTech ஆகிய நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன