நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் என்று சின்ன வட்டத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத கமல் இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர்.
இதுவரை 3 தேசிய விருதுகளையும், 18 திரைப்பட விழா விருதுகளையும் பெற்றுள்ள கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு வழங்கியுள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தமிழறிஞர் கலைஞரால் ‘கலைஞானி’ என்று போற்றப்பட்ட – எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என்று வாழ்த்தியுள்ளார்.