ஐ.நா. பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா!
ஐக்கிய நாடுகள் பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழு (ACABQ) என்பது, பொது சபையால் தனித்துவமாக நியமிக்கப்பட்ட 16 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.
இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது ஐ.நா. உறுப்பு நாடுகளின் வலுவான ஆதரவுடன் இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், “ஐ.நா. உறுப்பு நாடுகளின் வலுவான ஆதரவுடன், இந்தியாவின் வேட்பாளர் விதிஷா மைத்ரா இன்று ஐ.நா. பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகளுக்கான ஆலோசனைக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முக்கியமான தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த மற்றும் எங்கள் வேட்பாளர் மீது நம்பிக்கையை வெளிப்படுத்திய அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.நா.வின் பட்ஜெட் மற்றும் நிர்வாகத்தின் மீது தற்போது ஏற்பட்டுள்ள அழுத்தமான சூழ்நிலையில், இந்தியர் ஒருவர் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாதது” என தெரிவித்துள்ளார்.