இலங்கை இராணுவத்திற்கு தமிழ் கூலிப்படை?
வடமாகாணத்தின் வன்னி மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டங்களிலிருந்து மீண்டும் 9ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை படையினது எடுபிடிகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் வன்னியில் 4ஆயிரத்து 500 பேர் மற்றும் யாழப்பாணத்தில் 4ஆயிரத்து ஜநூறு என ஆட்கள் திரட்டபடவுள்ளனர்.
இவர்களிற்கு இலங்கை படையினர் போன்று மாதாந்தம் 80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இலங்கை படையினரது முகாம்களில் தொழிலாளிகளாக,மரவேலை மற்றும் கட்டடட வேலைகளை முன்னெடுப்பவர்களாக பூந்தோட்ட பராமரிப்பாளர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
2010ம் ஆண்டிலும் கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் இதே போன்றதொரு முயற்சி நடைபெற்ற போதும் அது படுதோல்வியடைந்திருந்தது.
இதனிடையே மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரதேசச்செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்ற அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
தலை மற்றும் உடல் பாகங்களில் காயங்கள் தென்பட்டதுடன் இனம் தெரியாத நபர்களினால் கூறிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.